ஒரு வாரத்தில் வெளியே வந்த உதயங்க வீரதுங்க
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் 10,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 2 சரீரப் பிணையில் உதயங்க வீரதுங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்டை வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம், கடந்த 10ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.