போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது
டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில், கோட்டாகோகம போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் ஜூலை 13 அன்று, போராட்டக்காரர்கள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து சிறிது நேரம் ஒலிபரப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.