லஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் இருவர் கைது

சீதாவக்க நகர சபையின் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளனர்

ஜுன் 24, 2023 - 16:57
ஜுன் 24, 2023 - 17:13
லஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் இருவர் கைது

சீதாவக்க நகர சபையின் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

400,000 ருபாய் லஞ்சம் கேட்டதாக நகரசபை செயலாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவிசாவளையைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பஸ் நிலையத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக நிலையத்தின் கடையொன்றின் உரிமையை துரிதமாக மாற்றுவதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்ட போதே இருவரும் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!