கோர விபத்தில் இரண்டு மாணவர்கள் பலி
4 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை - வேமதில்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
4 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹாவத்த பகுதியைச் சேர்ந்த பிசுல் ஹபீக் ஹம்னிதாஸ் (வயது 16) மற்றும் நவ்சாத் அலி முசாபிக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.