நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்
பாணந்துறை கடலோரக் காவல்படை, கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காப்புக் குழுக்கள் மூன்று நபர்களை மீட்டனர்.

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் 5 பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பாணந்துறை கடலோரக் காவல்படை, கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காப்புக் குழுக்கள் மூன்று நபர்களை மீட்டனர், எனினும் , இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பண்டாரகம அட்டாலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மொஹமட் இர்பான் மொஹமட் முஹம்மது என்ற 15 வயது சிறுவனும் யாசிர் அரபாத் அஹமட் என்ற மாணவனுமே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
ஒரு மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டதாகவும், மற்றைய மாணவன் அவரைக் காப்பாற்ற முயன்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
எனினும் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.