துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
T-56 துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நான்கு பேரும் அவிசாவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
இதேவேளை, தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது மற்றும் 43 வயதுடைய ஒருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.