மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு
ஹோட்டல் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா, வெதமன் வீதி பகுதியில் நேற்று (16) பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹோட்டல் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்ணில் புதையுண்ட இருவர் மீட்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காலி - ஹில்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 25 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.