மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி
12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இரத்தோட்டை, வெல்கலய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்கலய, ரத்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் ரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.