நுவரெலியாவில் குடும்ப தகராறில் பலியான இரு உயிர்கள்
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோப்பாஸ் பகுதியில் உள்ள தம்பதிகள் நேற்று (07) இரவு அவர்களது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்படி விசாரணையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் கணவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
உயிரிழந்தவர் 28 மற்றும் 26 வயதுடைய டோப்பாஸ், நுவரெலியாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமணமான தம்பதிகள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.