பாடசாலை வேன் மீது ரயில் மோதி கோர விபத்து இருவர் உயிரிழப்பு!

ரெயில் மோதியதில் ஆச்சாரியா பாடசாலை வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்ததை காண்போரை பதைபதைக்க வைக்கிறது. த்துள்ளது.

ஜுலை 8, 2025 - 15:27
பாடசாலை வேன் மீது ரயில் மோதி கோர விபத்து இருவர் உயிரிழப்பு!

இந்தியா - கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கடவையைக் கடக்க முற்பட்ட பாடசாலை வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

 ரயில்வே கடவையைக் கடக்க முற்பட்ட ஆச்சாரியா என்ற தனியார் பாடசாலைக்கு சொந்தமான வேன் மீது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதிய இந்த விபத்தில் வேனில் இருந்த பாடசாலைக் குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ரயில்வே கடவை கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த விபத்து கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேட் கீப்பரை தாக்கினர்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் கடலூர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வேனில் 5 பேர் பயணித்ததாகவும், விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். 

மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் பொலிஸாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ரெயில் மோதியதில் ஆச்சாரியா பாடசாலை வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்ததை காண்போரை பதைபதைக்க வைக்கிறது. த்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!