சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது
இருவரும் தங்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஃபைபர் படகில் இந்தியக் கடற்பரப்பிற்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை இந்தியாவின் மரைன் பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் தங்களை ஜூலியஸ் (23) மற்றும் ஜூட் ஆண்டனி (32) என அடையாளப்படுத்திக் கொண்டு இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக பொலிஸ் திணைக்கள ஆதாரங்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் இலங்கையின் கல்பிட்டியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் தமிழில் பேசியதாகவும், சந்தேகத்திற்குரிய இருவரிடமும் விசாரித்து வருவதாகவும் தமிழக பொலிஸார் கூறியுள்ளனர்.