சந்தேகத்துக்கு இடமான முறையில் இரண்டு சடலங்கள் மீட்பு
தம்புள்ளை பல்லேகம மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பல்லேகம மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (04) மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது, இவர் கித்துல்ஹிதியாவ, மடடுவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை இன்று (05) நடைபெறவுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நெலுவ, லெலாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
72 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.