இலங்கை ஒருநாள் அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள்
இந்திய அணியுடனான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியுடனான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காயம் ஏற்பட்டுள்ளதால், மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.
பயிற்சியின் போது தில்ஷான் மதுஷங்கவுக்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டது.
அத்துடன், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது கேட்ச் எடுக்க டைவிங் செய்யும்போது பத்திரனவுக்கு வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து இவர்களுக்கு பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குசல் ஜனித், பிரமோத் மதுஷன் மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே ஆகிய மூன்று வீரர்கள் காத்திருப்பு வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.