சாதாரணத் தர பரீட்சை தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 11 ஆம் திகதிக்குப் பிறகு நடத்தப்படும் கல்வி வகுப்புகள் குறித்து தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மார்ச் 11, 2025 - 11:46
சாதாரணத் தர பரீட்சை தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு

2024 ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சைக்காக மார்ச் 11 ஆம் திகதிக்குப் பிறகு நடத்தப்படும் கல்வி வகுப்புகள் குறித்து தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தத் திகதிக்கு அப்பால் நடத்தப்படும் ஏதேனும் கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது இணைய அமர்வுகள் குறித்து பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.

பொலிஸ் தலைமையகம் – 0112421111

பொலிஸ் அவசர உதவி எண் – 119

பரீட்சைகள் திணைக்களம்  – 1911

பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் கிளை  – 011 278 4208 / 011 278 4537

2024 ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சைக்கான அனைத்து வகையான கல்வி வகுப்புகள் மார்ச் 11 நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் மார்ச் 7 ஆம் திகதி அறிவித்தது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சை மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!