பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தவிசாளரான பி.இராஜதுரை இதற்கு முன்னர் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சிரேஷ்ட சட்டதரணி பி.இராஜதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இன்று (10) வழங்கப்பட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தவிசாளரான பி.இராஜதுரை இதற்கு முன்னர் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.