பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலி

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், இன்று விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 7, 2023 - 16:37
ஆகஸ்ட் 7, 2023 - 17:52
பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலி

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், இன்று விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீனன்குடாவில் விழுந்து பயிற்சி விமானம் விபத்துக்கு உள்ளானதாக  இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது.

இதன்போது விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிர் இழந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.

இலங்கை விமான படையின் சீனக்குடா இலக்கம் 1 விமான பயிற்சி பிரிவுக்கு சொந்தமான PT 6 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

திங்கட்கிழமை (07) முற்பகல் 11.25 க்கு புறப்பட்ட விமானம், 11.27க்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது,

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!