நாடு தழுவிய ரீதியில் இரண்டு நாள்கள் அடையாள வேலைநிறுத்தம்
இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படும்.

ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கம், நாளை (29) நள்ளிரவு முதல் நாடு தழுவிய 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.
சமீஞ்சை அமைப்புகள் பழுதடைந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்த அடையாள வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கத் தலைவர் கே.ஏ.யு. கொண்டசிங்க தெரிவித்தார்.
இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.