ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஏப்ரல் மாத்தில் 1,74,608 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத்தில் 1,74,608 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 17.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 8,96,884 சுற்றுலா பயணிகள் வருகை வந்துள்ளனர்.
அத்துடன். நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் தொடர்ந்து முன்னிலை வகிப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 38,744 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
மேலும், பிரித்தானியா (17,348), ரஷ்யா (13,525) மற்றும் ஜேர்மன் (11,654) போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது.