உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்கள்... முதலிடத்தில் எந்த நகரம் தெரியுமா?

இந்த தரவரிசையில் இரண்டு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

டிசம்பர் 2, 2023 - 13:24
உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்கள்... முதலிடத்தில் எந்த நகரம் தெரியுமா?

உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்கள்

உலக அளவில் நகரங்களை மதிப்பீடு செய்து வருடாந்தம் பட்டியலை வெளியிட்டு வரும் லண்டனை சேர்ந்த பிசினஸ் எகானாமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் புதிய பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்த ஆண்டுக்கான உலகின் மிகவும் செலவு குறைந்த நகரங்கள் தரவரிசை படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த தரவரிசையில் இரண்டு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

இதையும் படிங்க: வெள்ளை நிறத்தில் பிறந்த மூன்று அரியவகை சிங்கக்குட்டிகள்!

அந்த வகையில், இந்த தரவரிசையில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவதாக ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரமும் மற்றும் மூன்றாவது இடத்தில் லிபியாவின் திரிபோலி நகரமும் பிடித்துள்ளன. 

அத்துடன், உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்களின் தரவரிசையில் அகமதாபாத் 8ஆவது இடத்தையும், சென்னை 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!