வெள்ளை நிறத்தில் பிறந்த மூன்று அரியவகை சிங்கக்குட்டிகள்!

பண்ணை அல்லது காப்பகங்களில் வசிக்கும் பெண் சிங்கங்கள் தங்களின் குட்டிகளைக் கொன்றுவிடும் வாய்ப்புள்ளது.

டிசம்பர் 1, 2023 - 18:05
வெள்ளை நிறத்தில் பிறந்த மூன்று அரியவகை சிங்கக்குட்டிகள்!

வெனிசுவேலாவில் (Venezuela) விலங்கு பண்ணை ஒன்றில் முதல்முறையாக வெள்ளை நிறத்தில் 3 சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன.

விலங்கு பண்ணைகளில் அல்லது காப்பகங்களில் சில வெள்ளைச் சிங்கங்கள் உள்ளன.

ஆனால், காட்டில் 13க்கும் குறைவானவையே அவை இருக்கின்றன.

பிறந்துள்ள இந்த அரியவகைக் குட்டிகளில் இரண்டு ஆண் குட்டிகள். ஒன்று பெண் குட்டி.

அவை தாய் சிங்கத்திடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டன.

காரணம், பண்ணை அல்லது காப்பகங்களில் வசிக்கும் பெண் சிங்கங்கள் தங்களின் குட்டிகளைக் கொன்றுவிடும் வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு தான் குட்டிகளின் தாயும் தந்தையும் செக் ரிபப்லிக்லிருந்து (Czech Republic) வெனிசுவேலாவிற்குக் கொண்டு வரப்பட்டன.

வெள்ளை சிங்கங்கள் அல்பினோ (Albino -உடலுக்கு நிறமளிக்கும் அணுக்கள் இல்லாமல் பிறப்பது அல்பினோ எனப்படுகிறது) ரகத்தைச் சேர்ந்தவை அல்ல.

இந்த வகைச் சிங்கங்கள் பொதுவில் அரிய மரபணுக் கொண்டவை என்று கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!