இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம் (28.03.2024)

நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பணநெருக்கடி அகலும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர்

Mar 28, 2024 - 06:58
இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம் (28.03.2024)

இன்றைய பஞ்சாங்கம்

  • சோபகிருது வருடம் பங்குனி மாதம் 13-ந்தேதி செவ்வாய்க்கிழமை.
  • திதி: பிரதமை திதி பகல்(2.47)க்கு மேல் துவிதியை திதி.
  • நட்சத்திரம்: அஸ்தம் நட்சத்திரம் பகல்(1.23)க்கு மேல் சித்திரை நட்சத்திரம்.
  • யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.
  • சூலம்: வடக்கு
  • ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
  • எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
  • நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
  • சந்திராஷ்டமம்: இரவு 2.25 வரை கும்பம்; பிறகு மீனம்.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பணநெருக்கடி அகலும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.

ரிஷபம்: நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.

மிதுனம்: வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

கடகம்: இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சி வெற்றி பெறும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு.

சிம்மம்: தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. அன்னியதேசத் தொடர்பு அனுகூலம் தரும்.

கன்னி: யோகமான நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

துலாம்: மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

விருச்சிகம்: சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு: கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. கல்யாணப் பேச்சுகள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆசைப்பட்ட பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: எண்ணங்கள் நிறைவேற இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன பராமரிப்பு செலவு உண்டு. உறவினர்கள் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.