தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

விலை கடந்த சில நாட்களாக உலக சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருவதுடன், இன்று (13) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
அதன் படி,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 706,124 ரூபாயாக காணப்படுவதுடன், 24 கரட் தங்க கிராம் 24,910 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் 199,300 ரூபாயாகவும், 22 கரட் தங்க கிராம் 22,840 ரூபாயாகவும்பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் 182,700 ரூபாயாக காணப்படுகின்றது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,800 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 174,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரண தங்கத்தின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம்.