இலங்கை – மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் இதோ!
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் தொடர் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விலைகளை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஒருநாள் தொடர் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான டிக்கெட்டுகளை அடுத்த மாதம் 6ம் திகதி முதல் இலங்கை கிரிக்கெட் சபையின் www.srilankacricket.lk/ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
டி20 தொடருக்கான டிக்கெட்டுகளை ஒக்டோபர் 10ம் திகதி முதல் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு வித்தியா மாவத்தையில் நேரடியாக பெறமுடியும்.
அத்துடன், போட்டி தினங்களில் தம்புள்ளை பிரேதச சபையில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய முடியும்.
மேலும், ஒருநாள் தொடருக்கான டிக்கெட்டுகளை ஒக்டோபர் 18ம் திகதி முதல் பல்லேகல மைதானத்தில் கொள்வனவு செய்ய முடியும். அத்துடன், போட்டி தினங்களில் பலகொல்ல அபீதா மைதானத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதேவேளை, டிக்கெட்டுகள் மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 09 மணி முதல் இரவு 08 மணிவரை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், வித்தியா மாவத்தையில் மாலை 05.30 மணிவரை டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TICKET PRICES : RDICS ( T20I)
STAND
TICKET PRICE (RS.)
Level 3 – AC Box per seat (16 seats)
10,000.00
Grand Stand Level 3
5,000.00
Block A
2,000.00
Block B
2,000.00
Block C Lower
2,000.00
Block C Upper
1,000.00
Block D Lower
2,000.00
Block D Upper
1,000.00
Block E Lower
2,000.00
Block E Upper
1,000.00
Block F Lower
2,000.00
Block F Upper
1,000.00
Block H Lower
2,000.00
Sigiriya End (Standing)
500.00
TICKET PRICES: PICS, PALLEKELE ( ODI)
STAND
TICKET PRICE (Rs.)
GS Stand Top AC Box per seat (22 seats)
10,000.00
A Lower
2,000.00
B Lower
2,000.00
Grand Stand Top Level A
5,000.00
East Grass Embankment – (Scoreboard End)
500.00
West Grass Embankment
500.00