15 நாட்களில் தக் லைஃப் படத்துக்கு இத்தனை கோடி நஷ்டமா.?
படம் வெளியாகி 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்திய அளவில் வெறும் 47 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கமல், மணிரத்னம் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தக் லைஃப் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. தக் லைஃப் படமும் விமர்சன ரீதியாக பெரிய அடி வாங்கியதுடன் வசூலிலும் பின்தங்கியது.
அத்துடன், கமலின் பேச்சால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதுடன், இதனால் தக் லைஃப் படத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி நஷ்டம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
படம் வெளியாகி 15 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்திய அளவில் வெறும் 47 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை மணிரத்னத்துடன் இணைந்து தயாரித்த கமலுக்கு இது பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் படம் கமலின் ராஜ் கமல் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை கொடுத்தது.
ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய நஷ்டத்தை தக் லைஃப் கொடுத்துள்ளதாக பேசப்படுகின்றது.