ஓட்டோ சாரதி வெட்டி படுகொலை
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருக்பிட்டிய பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் (45 வயது) கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஓட்டோ சாரதியின் சடலம், வாகனங்களைப் பழுதுபார்க்கும் கேரேஜ் ஒன்றிலேயே மீட்கப்பட்டதாகவும் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாகவும் தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அத்துடன், கொலைக்கான காரணங்களும் வெளியாகவில்லை.
தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.