மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 33 மற்றும் 47 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 33 மற்றும் 47 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.