மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பிரன்ஸ்வீக் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மாணிக்ககல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
29, 32 மற்றும் 65 வயதுடைய மஸ்கெலியா பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 08ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு பொலிஸ் பிணையில் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.