கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூவர் கொலை; 6 பேர் கைது
29, 34 மற்றும் 45 வயதுடைய மாமடல பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் கொண்ட குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மூன்று பேர் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
29, 34 மற்றும் 45 வயதுடைய மாமடல பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பாக இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மாமடல பகுதியில் 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.