கல்முனை நகருக்குள் நுழையும் மூன்று பிரதான வீதிகள் முற்றாக தடை
92ஆவது நாளான இன்று (24) காலை 8 மணியளவில் பிரதேச செயலகத்தை பூட்டி, கல்முனை நகருக்குள் நுழையும் மூன்று பிரதான வீதிகளை மறித்த நிலையில் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் பொதுமக்கள் இணைந்து கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி முதல் 91 நாட்களாக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 92ஆவது நாளான இன்று (24) காலை 8 மணியளவில் பிரதேச செயலகத்தை பூட்டி, கல்முனை நகருக்குள் நுழையும் மூன்று பிரதான வீதிகளை மறித்த நிலையில் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலகப் பிரிவுகளை வர்த்தமானிப்படுத்த வேண்டிய பொறுப்பு நாட்டிலுள்ள அமைச்சுக்கு உறுத்துடையது என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.
அமைச்சரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு எதிராக தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசு அதிகாரி ஒருவருக்கு இல்லை எனவும் இருந்தபோதிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் உப செயலகம் ஒன்றாக தரமிறக்கும் நோக்குடன், 1993 /07/ 28ஆம் திகதி அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகத்தின் சில அதிகாரிகள், உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சின் சில அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இல.58 1992 ம் ஆண்டின் Transfer of powers (Divisional secretaries) Act சட்டத்தின் அடிப்படையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலகப் பிரிவுகளை வருத்தமாய் படுத்த வேண்டிய பொறுப்பு உள்நாட்டல்விகள் அமைச்சுக்கு உறித்துடையது. ஆனால், இதுவரை கல்முனை படகு பிரதேச செயலகம் வர்த்தமானிப்படுத்தப்பட இல்லை.
அமைச்சினால் வர்த்தமானிபடுத்தப்படாமல் அமைச்சரவை அங்கிகாரத்துடன் மாத்திரம் சில பிரதேச செயலகப் பிரிவுகள் இன்றும் தொழிற்படுகின்றன. குறிப்பாக,
மட்டக்களப்பு மாவட்டம் - கோறளைபற்று மத்திய பிரதேச செயலக பிரிவு, கோறளைபற்று தெற்கு பிரதேச செயலக பிரிவு
அம்பாறை மாவட்டம் - நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவு
வவுனியா மாவட்டம் - வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவு
பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் மாத்திரம் தொழிற்பட்டதுடன், காலம் கடந்தே அவை வர்த்தமானிப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக
அம்பாறை மாவட்டம் - இறக்காம பிரதேச செயலக பிரிவு 1999 இல் ஸ்தாபிக்கப்பட்டு, 2009இல் வர்த்தமானிப் படுத்தப்பட்டது. சாய்ந்தமருத பிரதேச செயலக பிரிவு 2002இல் ஸ்தாபிக்கப்பட்டு, 2006இல் வர்த்தமானிப் படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவு 1993இல் ஸ்தாபிக்கப்பட்டு, 1998இல் வர்த்தமானிப் படுத்தப்பட்டது.
கொழும்பு மாவட்டம் - இரத்மலான பிரதேச செயலக பிரிவு
களுத்துறை மாவட்டம் - வெலிப்பிட்டிய ,பிட்டபத்திர பிரதேச செயலுக்கு பிரிவுகள்
ஹம்பாந்தோட்டை மாவட்டம்- ஒக்கேவல பிரதேச செயலக பிரிவு
புத்தளம் மாவட்டம் -டன் கொட்டுவ, மாதம்பே, உடுப்பத்தற மகாகும்பு கடவல பிரதேச செயலக பிரிவுகள்
குருநாகல் மாவட்டம் - அலவ்வ, குளியாப்பட்டிய கிழக்கு, கனேவத்த ,மல்லவாபிட்டிய, கொட்டவெஹர பிரதேச செயலக பிரிவுகள்
அனுராதபுரம் மாவட்டம் - பளுகஸ்வெவ, விலாச்சிய பிரதேச செயலக பிரிவுகள்
இரத்னபுரி மாவட்டம் - கஹவத்த, ஒபநாயக்க, எலபாத்த பிரதேச செயலக பிரிவுகள்
அம்பாறை மாவட்டம் - காரதீவு, கல்முனை பிரதேச செயலக பிரிவுகள் போன்ற பிரதேச செயலக பிரிவுகள் 2001ஆம் ஆண்டு வர்த்தமானிப் படுத்தப்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் மாத்திரம் பாரபட்சமான நிலைப்பாடு காணப்படுவதாகவும் இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்ற கருத்தை நிலைநிறுத்தியும் இதனை உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அம்பாறை மாவட்டச் செயலாளரும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியே இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
(செய்தி நிருபர் : கஜானா)