எரிபொருள் நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வரிசைகள் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (1) பாராளுமன்றத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள வரிசைகள் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காட்டுவதற்காக சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஜயந்த சுட்டிக்காட்டினார்.