சாரதி ஓட்டுனர் உரிமம் அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லை; மாஃபியா குறித்தும் தகவல்!
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும் அத்தியாவசிய தேவையுடையவர்களுக்கும் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சாரதி ஓட்டுனர் உரிமம் அச்சிடுவதற்குரிய அட்டைகள் இல்லாத காரணத்தால் சுமார் 9 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் கிடப்பில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.
எனினும், அடுத்த 6 மாதங்களில் அனைத்து ஓட்டுனர் உரிமங்களும் அச்சிடப்படும் என்றும் அவர் நம்பித்கை தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும் அத்தியாவசிய தேவையுடையவர்களுக்கும் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஓட்டுனர் உரிமம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்பவர்கள், தரகர்களுடன் இணைந்து சட்டவிரோதமாக நாளொன்றுக்கு 700 முதல் 800 ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதற்கு தலா 5,000 ரூபாய்க்கு மேல் பெறுவதாகவும் சம்பந்தப்பட்ட மோசடி அதிகாரி வாரத்திற்கு 10 முதல் 20 இலட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.