கந்தானை ஆலயத்தில் புனித செபஸ்டியாரின் சிலை திருட்டு
சிவப்பு தொப்பி அணிந்து, முகத்தை மறைத்த நபர் ஒருவர் சிலையை திருடியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

கந்தானை புனித செபஸ்தியர் ஆலயத்தில் உள்ள சிலையொன்று இன்று அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்குள் திருடப்பட்டுள்ளதாக தேவாலயம் தெரிவித்துள்ளது.
சிவப்பு தொப்பி அணிந்து, முகத்தை மறைத்த நபர் ஒருவர் சிலையை திருடியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
குறித்த நபர், ஆண்கள் ஆரம்பப் பாடசாலை திசையிலிருந்து ஆலயத்துக்குள் நுழைந்து அதே வழியில் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருமார்கள் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து காணாமல் போன அதிசய சிலையை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை தேவாலயம் நாடியுள்ளது.