இலங்கைக்கு டொலரை வழங்க உலக வங்கி அனுமதி
இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அனுமதி நேற்று (28) கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய நிதி நிவாரணம் இதுவாகும்.
அந்தத் தொகையில், 500 மில்லியன் அமெரிக்க டொலர் பட்ஜெட் ஆதரவிற்காகவும், 200 மில்லியன் அமெரிக்க டொலர் சமூகப் பாதுகாப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.