பாடசாலை மாணவர்களுக்கு  இலவச பாதணிகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

குறித்த வவுச்சர்களை, பதிவு செய்யப்பட்ட  விற்பனை நிலையங்களில் கொடுத்து, இலவசமாக பாதணிகளை மாணவர்கள் பெற முடியும்.

டிசம்பர் 4, 2023 - 14:37
டிசம்பர் 4, 2023 - 14:38
பாடசாலை மாணவர்களுக்கு  இலவச பாதணிகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்கள் இலவசமாக பாதணிகளை பெறும் வகையில் வவுச்சர் வழங்கும் திட்டம், இன்று (04) முதல் ஆரம்பமாகிறது. 

இதன் ஆரம்ப நிகழ்வாக, வடகொழும்பில் உள்ள இரு பாடசாலை மாணவர்களுக்கு  கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் இலவச பாதணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. 

குறித்த வவுச்சர்களை, பதிவு செய்யப்பட்ட  விற்பனை நிலையங்களில் கொடுத்து, இலவசமாக பாதணிகளை மாணவர்கள் பெற முடியும்.

இம்மாதம் 9ஆம் திகதி வரை மாணவர்கள் தமக்கான பாதணிகளை கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். 

இத்திட்டத்தின் ஊடாக, நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.  

இதேவேளை, இந்த வவுச்சர்களை எவரும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!