கறுவாப்பட்டையின் விலை ரூ.500ஆக குறைந்தது!
அல்பா கறுவாப் பட்டை இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும் மிக உயர்ந்த தரமாகும்.

இலங்கை சந்தையில் கறுவாப்பட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒரு கிலோகிராம் அல்பா கறுவாப்பட்டை 4,800 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 500 ரூபாய்கே விற்பனை செய்யப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அல்பா கறுவாப் பட்டை இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும் மிக உயர்ந்த தரமாகும்.
கறுவாப்பட்டையின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக கறுவா செய்கையை பிரதான வாழ்வாதாரமாக கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவன மற்றும் வலஸ்முல்ல பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.