கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11, 2023 - 15:10
கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) காலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்பதோடு அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!