4 கிலோ மீற்றர் நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த சிறுமி
11 வயது சிறுமி ஒருவர் மாற்றாந்தாயின் தொல்லை தாங்க முடியாமல் தனியாக பொலிஸ் நிலையத்துக்கு நடந்து வந்ததாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 வயது சிறுமி ஒருவர் மாற்றாந்தாயின் தொல்லை தாங்க முடியாமல் தனியாக பொலிஸ் நிலையத்துக்கு நடந்து வந்ததாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாய் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்து விட்டதாகவும், பின்னர் அவரது தந்தை ஒரு மகளுக்கு தாயான கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்துக்கு வந்த சிறுமி, தனது சித்தி தனது மகளிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வதாகவும், ஆனால் தன்னை நிராகரித்து தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சித்தியின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுதவாறே பொலிஸாரிடம் வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறுமி தனது வீட்டிலிருந்து பொலிஸ் நிலையத்துக்கு சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே சென்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.