பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது G20 மாநாடு!

G20 Summit: இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. 

செப்டெம்பர் 9, 2023 - 11:30
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது G20 மாநாடு!

G20 Summit: இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. 

இதில், பல உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர், இதனை முன்னிட்டு டெல்லி விழாக்கோலம் காட்சியளிக்கிறது.

இந்த மாநாட்டில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என  இதில் பங்கேற்கின்றனர்.
   
இந்த விழாவில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் என அனைவரும் அடுத்தடுத்த டெல்லி வந்தடைந்தனர். 

டெல்லி வருகை தந்த தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

பிரதமர் அலுவலகங்கள் அறிக்கையின்படி, இன்று காலை 10 மணிக்கு மேல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்குகிறது. மதியம் 1மணிக்கு மேல் இடைவெளி விடப்படுகிறது. 

அதன் பின், அமர்வு தொடங்கும், இந்திய அரசு சார்பில், இன்று G20 தலைவர்களுக்கு விருந்து வழங்கப்பட உள்ளது. மாநாடு முடிந்த பின்பு, பின்னர், இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.

20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, கல்வி நிறுவனங்கள், தனியார், அரசு அலுவலகங்கள் ஆகியவை 10ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாடகை ஆட்டோ ரிக்ஷா, கால் டாக்சி ஆகியவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தலைவர்கள் தாங்கும் விடுதிக்கு மேல் டிரோன்கள் பறந்தால் அதனை தாக்கி அழிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடடில் பங்கேற்க வரும் உலக நாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.  

அங்கிருந்து சிறப்பு பாதை வழியாக அவர்கள் தாங்கும் இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் அவர்கள் ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு அருகே தாங்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!