முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு
இந்த வருடத்தின் முதலாவது பாடசாலை தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் (10) நிறைவடைகின்றன.

இந்த வருடத்தின் முதலாவது பாடசாலை தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் (10) நிறைவடைகின்றன.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இம்மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.