தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (30) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (30) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பு ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான பல விடயங்கள் தொடர்பில் அந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொலிஸ்மா அதிபர் இல்லாமல் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு மேலதிகமாக தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை கையளிப்பது மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழு முதல்முறையாக கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.