மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்
அஸ்வெசும நிவாரண பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கான நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நிவாரண பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேன்முறையீடுகள் தொடர்பில் திருப்தியடையாத பட்சத்தில் அதன் பிரதியொன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய கட்சிகளின் தேவைகளுக்காக மக்கள் போராட்டங்களுக்கு முன்வர வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.