வாகன இறக்குமதி; அரசாங்கம் அனுமதி - முழுமையான அறிவிப்பு!
அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 2025 பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது X தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 2025 பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணிக் கையிருப்பு முன்னேற்றம் மற்றும் ரூபாயின் பெறுமதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையால் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டது.
பின்னர், அண்மையில் சில வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.