தேசபந்துவின் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி
பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியமைப்பு பேரவை இன்று வெள்ளிக்கிழமை கூடிய போதே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று முன்தினம் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
மூன்று மாதங்களுக்கு பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, புதிய பதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கான அங்கீகாரத்தை பெறும் யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைத்திருந்தார்.