அரிசி இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை அடுத்து, 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது.

சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை அடுத்து, 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாத பண்டிகைக்காலத்தினை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
அடுத்துவரும் சில நாட்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீரி சம்பா மற்றும் சம்பாவுக்கு பதிலாக அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பெரியளவிலான அரிசியாலை உரிமையாளர்களினால் நீண்டகாலமாக விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விடயம் தொடர்பில் நிரந்தரத் தீர்வை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக கூறியுள்ளார்.