அலரி மாளிகை முன்பாக பதற்ற நிலைமை: இளைஞர் காயம்
இந்தச் சம்பவத்தில் இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலரி மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அஙகு பதற்றமான நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் இளைஞர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மற்றும் பஸ்களை அகற்ற பொலிஸார் முயற்சித்தபோது இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.