சீரற்ற வானிலை: சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை அறிவிப்பு
மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், இந்த நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில பகுதிகளில் காணப்படும் மண்சரிவு அபாயம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், இந்த நிலைமை சீராகும் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகள் மற்றும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலை என்பவற்றுக்கு நேற்று (07) முதல் விடுமுறை வழங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, புலத்சிங்கள ஹல்வதுர தமிழ்க் கல்லூரி, பரகொட கித்துலகொட கனிஷ்ட கல்லூரி, மேல் வெல்கம கனிஷ்ட கல்லூரி, மத்துகம பிரதேசத்தின் மொல்காவ தர்மபால மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.