தீர்வு கிடைக்கவில்லை; மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எதிர்காலத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
“ஜனாதிபதி பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து தொழில் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிக்கிறார். பாரிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டகளை நாங்கள் நிச்சயமாக நடைமுறைப்படுத்துவோம். இந்த நிலைமையை வேலைநிறுத்தம் வரை செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.