நாளைய தினமும் ஆசிரியர்கள் போராட்டம் - ஜோசப் ஸ்டாலின்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.