ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம்
தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தை தீர்வு காண வலியுறுத்தி, அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள். திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தை தீர்வு காண வலியுறுத்தி, அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள். திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற முன்மொழிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதாக அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் வழங்குமாறு கோரி, திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளுமாறு ஒன்றிய செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.