வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு - வெளியான தகவல்

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் இருந்தது.

ஆகஸ்ட் 30, 2024 - 11:19
வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு - வெளியான தகவல்

இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து இருநூற்று அறுபத்து நான்கு (316,264) ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 997,858 ஆக இருந்தது, இந்த ஆண்டு ஜூலை 31 அன்று இந்த எண்ணிக்கை 1,314,122 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் இருந்தது.

இந்த ஆண்டு (2024) ஜூலை 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1,182,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 131,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே TIN எண்ணைப் பெற்ற மொத்த நபர்களின் எண்ணிக்கை 4,577,303 ஆகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!